Skip to main content

திருட்டு மணல் அள்ளிய மாஃபியா கும்பல்:வேலைக்கு சென்ற 9 ஆம் வகுப்பு மாணவன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வழியாக பாலாற்றின் ஒரு பகுதி பிரிந்து செல்கிறது. இது செய்யாறு என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் இரவு, பகல் என எந்த நேரமும் திருட்டு தனமாக மணல் அள்ளிவருகின்றனர். இதனை கண்டுக்கொள்ளாமல் இருக்க செய்யார் டி.எஸ்.பி அலுவலகம், தூசி காவல்நிலையம், செய்யார் தாசில்தார் அலுவலகத்துக்கு வாராவாரம் மாமூல் தரப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் அதனை கண்டுக்கொள்வதில்லை.

 

sand

 

இந்நிலையில் இன்று ஏப்ரல் 15ந்தேதி, செய்யாற்றில் மணல் அள்ளும்போது மணல் சரிந்து மண் அள்ளி மாட்டு வண்டியில் நிரப்பிக்கொண்டுயிருந்த 9 ஆம் வகுப்பு மாணவன் பிரவீன் இறந்துள்ளான். விடுமுறை நாளில் மணல் அள்ளி நிரப்ப செல்வானாம். இதற்காக அவனுக்கு 500 ரூபாய் கூலி வழங்குவார்களாம். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது, விடுமுறையில் இருப்பதால் இன்று மணல் அள்ளி போடச்சென்றுள்ளான் என முதல் கட்டமாக தெரிய வந்துள்ளது.

 

 

உடன் மணல் அள்ளியவர்கள் அதனை பார்த்துவிட்டு அவனை காப்பாற்ற முயன்று முடியவில்லை என்றதும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். விவகாரத்தை கேள்விப்பட்டு பிரவீன் உறவினர்கள், அக்கம் பக்க கிராம மக்கள் சம்பவம் நடந்தயிடத்தில் குவிந்துவருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாகவுள்ளது.

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !