Skip to main content

வைகையில் மணல் குவாரி.. ஜீலை24 ல் கடை அடைப்பு..!        

Published on 21/07/2018 | Edited on 27/08/2018

           

puthu

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றில் மணல் அள்ளவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரை, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை24 ல் கடைஅடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர்.  மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர்,வாகுடி ஆகிய கிராமத்திற்குட்பட்ட வைகைஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளனர். தெ.புதுக்கோட்டை பகுதியில் மணல் அள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

 

மானாமதுரை பகுதியிலிருந்து வைகை ஆற்றிலிருந்து குடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. 72 குடிநீர் திட்டங்களிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் ஆகி கொண்டிருக்கிறது. தற்போது ராஜகம்பீரம் அருகேயிருந்து வைகைஆற்றிலிருந்து மானாமதுரை நகருக்கு விநியோகம் ஆகி கொண்டிருக்கிறது. மானாமதுரைக்கு விநியோகம் ஆகிற குடிதண்ணீர் நீர்வளம் படுபாதளத்திற்கு சென்றுவிட்டது. இதன் காரணமாக மானாமதுரை நகர் மக்களுக்கு குடிதண்ணீர் விநியோக  நேரம் குறைந்துவிட்டது. இதே போன்றுதான் கடலாடி கூட்டுக்குடிநீர் திட்டமும் நீர் ஆதாரம் குறைந்திருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் இருக்கிற மண் வளத்தை அள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளனர்.

 

tp

   

தெ.புதுக்கோட்டை அருகே வைகை ஆற்றில் பி.ஆலங்குளம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் தெ.புதுக்கோட்டை, சின்னபுதுக்கோட்டை, முட்டைக்குறிச்சி, கோச்சடை, கணையனேந்தல், ஆலம்பச்சேரி, கோவானூர், மேலநெட்டூர்ஒரு பகுதி, ஆலங்குளம், நல்லாண்டிபுரம்,தெற்குசந்தனூர், எஸ்.காரைக்குடி, வடக்குசந்தனூர், அரியனூர், வண்ணான்ணோடை, செய்யாங்கோட்டை, புவனேந்தல் ஆகிய கிராமங்களுக்கு குடி தண்ணீர் விநியோகம் பாதிப்படைந்துள்ளது. இதே போன்று 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட தெ.புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் பத்தாயிரம் லிட்டர் தண்ணீர்கூட நிரம்புவதில்லையென என்ற குற்றச்சாட்டும் உண்டு.  பிராமணக்குறிச்சியில் உள்ள 10 ஆயிரம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலைத் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பவில்லை. 30ஆயிரம் கொள்ளளவு கொண்ட கீழப்பெருங்கரை மேல்நிலைத்தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேல்நிலைத் தண்ணீர் தொட்டி மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியிருக்கிறது. 

 

    போராட்டம் எவ்வளவு நடந்தாலும் பரவாயில்லை மணல் அள்ளியே தீருவோம் என தமிழக அரசு தீர்மானித்து தெ.புதுக்கோட்டை அருகே வைகையில் மணல் அள்ள டெண்டர் விட்டுள்ளது.  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.தவிர அனைத்து கட்சியினரும் வரும் ஜீலை 24 ல் மானாமதுரை, தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடைஅடைப்பு தெரிவித்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் விதிமீறல்? நீதிமன்றம் செல்ல தயாராகும் ஆசிரியர்கள்

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

 

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, புதுக்கோட்டை, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளது. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரியாக இருந்த அண்ணாதுரை ரஞ்சன் இன்று பிப்ரவரி 28 ந் தேதியுடன் பணிநிறைவு பெற்றார். அந்த இடத்திற்கு தற்காலிகமாக  தரவரிசை அடிப்படையில் மூத்த ஆசிரியரை நியமனம் செய்யப்படுவார் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

 

te


மூப்பு பட்டியலில் இருந்த ஆசிரியர்கள் தங்களுக்கு அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நேரத்தில் பெருமானாடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) பணி ஏற்றுக் கொண்டார். இதைப்பார்த்த வரிசையில் காத்திருந்த ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியானது. அதாவது இந்த பொறுப்புக்கு வரும் ஆசிரியர்கள் தர வரிசையில் இல்லாதவர் எப்படி திடீரெனெ அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டார் என்றும் மேலும் அவர் மீது 17 பி இருந்தது. 


கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு என வழக்கு இருந்தது. அந்த வழக்குகள் முடிந்ததா? நிலுவையில் உள்ளதா என்பதே தெரியாத நிலையில் வரிசையில் பின்னால் இருந்தவரை முதல் இடத்திற்கு கொண்டு வந்து பொறுப்பு பணி வழங்கி இருப்பதில் முறைகேடு நடந்துள்ளது என்று கூறும் ஆசிரியர்கள் முறையாக காயாம்பட்டி தலைமை ஆசிரியர் அல்லது பெருங்களூர் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் போன்றவர்கள் வரிசையில் முன்னால் இருப்பவர்களை எப்படி உதாசீனப்படுத்தினார்கள்?

 

இந்த பணி நியமனத்தில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. அதற்கு காரணம் மாரிமுத்து அதிமுக மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களின் பின்னால் இருப்பது எப்பவும் கல்வி அலுவலகத்திலேயே இருப்பதாலும் விதிமுறைகளை பின்பற்றாமல் நியமனம் செய்யப்பட்டிருக்கலாம்.   


எல்லாவற்றுக்கும் நீதி கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தான் தட்ட வேண்டிய நிலை உள்ளது என்றனர் வரிசையில் முன்னால் இருக்கும் ஆசிரியர்கள் வருத்தமாக..
மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை மாநில கல்வி அதிகாரிகள் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை இல்லாத பட்சத்தில் மாநிலம் முழுவதும் விதிமுறை மீறல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் கல்வி அமைச்சர், கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்து கொண்டிருக்கிறது.