கடந்த நான்கு மாதங்களாக சாலக்குடி மற்றும் மாதவப் பெருமாள் கோவில் பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் மாட்டு வண்டி குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் இதனைத் திறக்க கோரி வருகின்ற 3ஆம் தேதி வீடுகள் முன்பு கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மணல் குவாரிகளை திறந்து மாட்டுவண்டி தொழிலாளர் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனவே தங்களுடைய கோரிக்கையை ஏற்று விரைவில் குவாரிகளை திறக்காவிட்டால் திருவெறும்பூர் தாலுகா மண்ணச்சநல்லூர், லால்குடி, திருச்சி மேற்கு, கிழக்கு, ஸ்ரீரங்கம் தாலுகாக்களில் உள்ள 2,000 மாட்டுவண்டி தொழிலாளர்களின் வீடுகளில் வருகிற 3ம் தேதி கருப்புக் கொடி கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், வருகிற 6ம் தேதி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.