Skip to main content

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் அரங்கநாதனிடம் சீர் பெறும் விழா; கோலாகலக் கொண்டாட்டம்

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

 

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமியிடம் சீர் பெறும் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

 

தைப்பூச பெருந்திருவிழாவில் தீர்த்தவாரி மற்றும் சீர் பெறும் விழாவிற்காக கொள்ளிடம் ஆற்றில் சமயபுரம் மாரியம்மன் எழுந்தருளினார். பல நூறு ஆண்டுகளாக இந்த சீர் கொடுக்கும் பெருவிழா நடைபெற்று வருகிறது. மாரியம்மனுக்கு என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு திருத்தலங்கள் இருந்தாலும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றவராகவும் எல்லா மாரியம்மன் திருத்தலங்களிலும் முதன்மையானவராகவும் பார்க்கப்படுகிறார்.

 

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் தைபூச தினத்தன்று கொள்ளிடம் ஆற்றங்கரையில் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமியிடம் இருந்து சீர்வரிசை பெறும் நிகழ்ச்சி மிகவும் சிறப்புக்குரிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கூத்தூர் டோல்கேட் வழியாக வழி நெடுகிலும் தேங்காய், மாப்பூசை வாங்கியபடி கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள் தீர்த்த வாரி சமயபுரம் மாரியம்மனுக்கு வழங்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கப்பூர் கோயிலில் கைவரிசை; கம்பி என்னும் தமிழக பூசாரி

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

singapore mariamman priest gold jewel issue court judgement came

 

சிங்கப்பூரில் உள்ள சவுத் டவுன் என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலானது மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் தலைமை பூசாரியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ கந்தசாமி சேனாபதி. இவர்  2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்த கோவிலில் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வந்தார்.

 

இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இவர் பொறுப்பில் இருந்து வந்துள்ளன. அப்போது அவர் கோவில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வந்துள்ளார். மேலும் இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது நடந்த ஆய்வில் அர்ச்சகர் கந்தசாமி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானது.

 

இதனைத் தொடர்ந்து பூசாரி கந்தசாமியின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கந்தசாமி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது பூசாரி முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கந்தசாமிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை எண்ணும் பணி; உண்டியலில் குவிந்த தங்கம்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

trichy samayapuram mariamman temple donation counting 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

 

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 13 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 485 ரொக்கமும் 2 கிலோ 759 கிராம் தங்கமும் 5 கிலோ 117 கிராம் வெள்ளியும் 113 அயல்நாட்டு நோட்டுகளும் 264 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.