Skip to main content

கட்டுமானப் பணிகள் தொடங்கும் முன்பு கட்டட அனுமதி பெறுவது கட்டாயம்; சேலம் மாநகராட்சி அதிரடி!

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Salem Municipal Corporation said mandatory obtain building permission before starting construction work

 

சேலம் மாநகரில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கும் முன்பே திட்ட மற்றும் கட்டட அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் உபயோகத்திற்காகக் குடியிருப்பு, வணிக பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் அனைத்து வகை கட்டுமானப் பணிகள் துவங்குவதற்கு முன்பாகவே உரிய திட்ட மற்றும் கட்டட அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.     

 

கட்டட அனுமதி குறித்த முழு விவரங்களை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019 மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களை, இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். சேலம் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்கள், சேலம் மாநகராட்சி நடைமுறை சட்டத்தின் கீழ் உள்ளவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்