Published on 29/06/2022 | Edited on 29/06/2022

சேலம் மாவட்ட வருவாய் அலுவலராக (டிஆர்ஓ) பணியாற்றி வந்த ஆலின் சுனேஜா இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, புதிய டிஆர்ஓ ஆக மருத்துவர் பெ.மேனகா நியமிக்கப்பட்டார்.
அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 27) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கோட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.