Skip to main content

ஆட்டிறைச்சிக்காக தம்பியைக் கொன்ற அண்ணன்... திருச்சியில் சோகம்!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

sad incident in thiruchy

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே வசித்து வரும் செல்லைய்யா என்பவருக்கு மூன்று மகன்கள். மூன்று பேரில் இரண்டாவது மகனான சிவக்குமார் சமைத்துச் சாப்பிடுவதற்காக இறந்த ஆட்டை விலைகொடுத்து வீட்டுக்கு வாங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. அப்பொழுது அங்கு வந்த சிவக்குமாரின் தம்பி ரவிக்குமார், இறந்துபோன ஆட்டை சமைத்துச் சாப்பிடுவது உடலுக்குத் தீங்கு தரும். உயிருடன் இருக்கும் ஆட்டை வாங்கி வந்திருக்கலாம். ஏன் இப்படிச் செய்தாய் என சிவக்குமாரிடம் சண்டையிட்டுள்ளார்.

 

sad incident in thiruchy

 

இந்தச் சண்டையானது இறுதியில் கைகலப்பாக மாற, அண்ணன் செல்வகுமார் தம்பி ரவிக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார். உடனடியாக ரவிக்குமார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்ட நிலையில், போகும் வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருச்சி தாத்தையங்கார் பேட்டை காவல்துறையினர் தம்பியைக் கொன்ற அண்ணனைத் தேடிவருகின்றனர். ஆட்டிறைச்சிக்ககான வாய்த் தகராறில் தம்பியை அண்ணன் கத்தியால் குத்திக் கொன்றது அங்கு பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்தேகத்தின் பேரில் ஓட ஓட விரட்டி ஒருவர் வெட்டிக் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Suspect chased away a person  incident

அரியலூர் மாவட்டம் குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன்(45). இவருக்கு புஷ்பவள்ளி என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். விவசாயியான மனோகரன் விவசாய பணிகளுக்காக டிராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின் போன்றவற்றை விலைக்கு வாங்கி வைத்துள்ளார். தனது சொந்த வேலைகள் போக அப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் தனது ட்ராக்டர் மற்றும் நெல் அறுவடை மெஷின்களை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தனது விவசாய ட்ராக்டரை ஓட்டுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை பணிக்கு அமர்த்தியுள்ளார். ரமேஷ்க்கு குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாததால் தனது வீட்டிலேயே தங்க வைத்துள்ளார் மனோகரன். ரமேஷும் வீட்டில் இருந்தபடியே மனோகரனுக்கு உதவியாக அவரது விவசாய வாகனங்களை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் தங்கியிருக்கும் ரமேஷுக்கும், தனது மனைவி புஷ்பவள்ளிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். நாளடைவில் மனோகரனுக்கு இருக்கும் சந்தேகம் அதிகமான நிலையில் நேற்று விவசாய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது கையில் அரிவாளுடன் காத்திருந்த மனோகரன் ரமேஷை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அரிவாளுடன் வெங்கனூர் காவல் நிலையத்தில் மனோகரன் சரணடைந்துள்ளார். இதனிடையே ரமேஷின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; அதிமுக நகர செயலாளர் கொலை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 AIADMK official who cheated by promising to get a job was passed away
வெங்கடேசன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர  செயலாளராக  வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் கல்லால் தலையில்  தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து  வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன்  மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை  வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.