SA Chandrasekar visit Thirukadayur temple

80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்.

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், காலசம்கார மூர்த்தியும் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன், எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று வரம் அளித்த தளமாக விளங்குவதால் பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்தி வேண்டி சஷ்டியப்தபூர்த்தி, (அறுபதாம் கல்யாணம்) செய்வது சிறப்பம்சமாகும். மேலும் ஆயுள் விருத்திக்காக உக்ரரதசாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட திருமண பூஜைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வருகிறார்கள்.

Advertisment

இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், கோவிலுக்கு வந்து சிறப்பு ஹோமம் செய்து கொண்டார். எஸ்.ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்திக்காக சதாபிஷேக ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தனது மகன் நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.