Skip to main content

கிடைக்காத செல்ஃபோன் சிக்னல்... ஆன்லைன் வகுப்புக்காக ஆலமரத்தில் தஞ்சமடைந்த கிராமப்புற மாணவர்கள்!!

Published on 04/07/2021 | Edited on 04/07/2021

 

Rural students who make demands about online class

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்டங்கள் வகை 1, 2, 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இந்தமுறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதிகப்படியான மாணவர்கள் செல்ஃபோன் மூலமாகவே ஆன்லைன் கல்வி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செல்ஃபோன் டவர் சிக்னல் கிடைக்காததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 

Rural students who make demands about online class

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பெரியகோம்பை, பஞ்சோலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் அப்பகுதிகளில் போதிய அளவில் செல்ஃபோன் சிக்னல் கிடைக்காததால் செல்ஃபோன் சிக்னலுக்காக ஊரில் உள்ள ஆலமரங்களில் ஏறி ஆபத்தான முறையில் ஆன்லைன் பாடம் கற்று வருகின்றனர். தங்களது கிராமத்திற்கு செல்ஃபோன் டவர் அமைத்து தருமாறு மாணவர்கள் மற்றும்  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தினமும் வகுப்பிற்கு வர வேண்டியிருக்கிறது, மழை நேரங்களில் பயமாக இருக்கிறது. செல்ஃபோன் சிக்னல் கிடைக்காத காரணங்களால் ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்ய முடியவில்லை, அப்படி அட்டென்ட் செய்யமுடியாத நிலையில் வருகைப்பதிவேடு பாழாகிறது. வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அதனால் செல்ஃபோன் டவர் அமைத்துக் கொடுத்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர் கிராமப்புற மாணவர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நான்கு நாட்களாக மின்தடை; இருளில் மூழ்கிய 50 மலைக் கிராமங்கள்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Power outage for four days; 50 hill villages plunged into darkness

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலைக்கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர்ப் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு திம்பம் மலைப்பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைபட்டது. மலைக்கிராம மக்கள் அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் 4- வது நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மலைக்கிராமங்களான கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர்,கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி,காளிதிம்பம்,தடசலட்டி என 50 மேற்பட்ட மலைக் கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது .மின் தடையால் ஊராட்சிக்குச் செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர்.மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகே உள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர்.

இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரைக் குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும், சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாகக் கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

ட்ரம்ஸ் வாசிக்க மறுப்பு; ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தையே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
village that excluded entire caste community from town because they dont play drums

உத்திரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ளது சுபய் கிராம். இந்த கிராமத்தில் 6 பட்டியலின வகுப்பைச் சேர்ந்த குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பல சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் ட்ரம்ஸ் வாசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் அந்த கிராமத்தில் கோவில் திருவிழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ட்ரம்ஸ் வாசிக்க புஷ்கர் லால் என்ற பட்டியலின சமூகத்தைச் சார்ந்த  நபரிடன் கிராம தலைவர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தன்னால் வாசிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், புஷ்கர் லால் கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பஞ்சாயத்தின் வழக்கப்படி பட்டியலின் குடும்பங்கள் வனம் மற்றும் நீர் வளங்களைப் பயன்படுத்தவும், கடைகளில் பொருட்கள் வாங்கவும், விற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பொது போக்குவரத்தில் பயணிக்கவும், கோவிகளில் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த பஞ்சாயத்து உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது பட்டியலின மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் கிராம தலைவர்கள் ராமகிருஷ்ண காந்த்வால் மற்றும் யாஷ்வீர் சிங் ஆகியோர் மீது ஜோஷிமத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.