Skip to main content

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய ஆர்.டி.ஓ.க்களுக்கு உத்தரவு!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதி செய்த பிறகே, இயக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களின் பர்மிட் ரத்து செய்யப்படுகிறது.


தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன்னதாக, அனைத்து பள்ளி வாகனங்களையும் முழுமையாக தணிக்கை செய்ய வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

 

bus


வாகனத்தின் பதிவு சான்று, அனுமதிச்சான்று, ஓட்டுநர் அனுபவம், நிர்வாகத்தினால் நடத்துநர் நியமிக்கப்பட்டதற்கான உத்தரவு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. 


இதுகுறித்து வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பள்ளி வாகனங்கள் முழுமையான தரத்துடன் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை தமிழக போக்குவரத்துறை ஆணையருக்கு சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோட்டில் போலீசார்  விடிய விடிய தீவிர சோதனை!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. அதன் பிறகு தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முடிந்தவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் அந்தந்த சர்க்கிள் உள்ளிட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் விடுதி மற்றும் திருமண மண்டபங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

விடுதியில் தங்கி இருந்தவர்கள் விவரங்களை சேகரித்தனர். இதேப்போல் திருமண மண்டபங்களில் வெளிநபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி கூட்டம் கூட்டக்கூடாது. பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை மீறி செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Next Story

லாரியுடன் சிக்கிய 1,425 கிலோ தங்கம்; பறக்கும் படை அதிரடி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
1,425 kg of gold caught with the truck; The Flying Squad is in action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள், வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை குன்றத்தூர் அருகே 1,425 கிலோ தங்கத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த சிறிய ரக லாரி ஒன்றை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 1,425 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, தங்க சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. அவற்றை தற்போது அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் .பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.