Skip to main content

ரூ.45 லட்சம் மோசடி புகார்; நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீது புகார் 

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

Rs 45 lakh  complaint; Complaint against the state coordinator of Naam Tamilar Party

 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசு மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

அம்பத்தூரில் வசித்து வருபவர் அன்பு தென்னரசன். இவர் நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு அய்யப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி கொரட்டூர் அக்ரஹாரத்தை சேர்ந்த ஜெயராம் என்பவரிடம் 45 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் கொடுத்து நெடு நாளாகியும் வீடு வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்ததால் அம்பத்தூர் காவல்நிலையத்தில் ஜெயராம் புகாரளித்துள்ளார். 

 

புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் காவல்துறையினர் எடுக்காததால் மீண்டும் 2022ம் ஆண்டு அன்பு தென்னரசு மீது ஜெயராம் புகாரளித்துள்ளார். மேலும் தீவிர நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயராம் நீதி மன்றத்தை நாட, நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அன்புத் தென்னரசின் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வந்து போட்டோவை பாக்குறதுக்கு வாட்ஸ் ஆப்ல பார்த்துட்டு போயிடலாமே;எதுக்கு வர்றீங்க' - சீமான் கேள்வி   

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
nn

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிதி ஆணையத்தின் விதிப்படியே மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து வழங்கப்படுகிறது. நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014 முதல் 2023 மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடியாகும். இந்த தொகைக்கான மானியமாக ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து பெற்றதைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014 - 2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர். 'கவர்மெண்ட் நடத்துகிறீர்களா அல்லது கந்துவட்டி நடத்துகிறீர்களா? என் வரியை நீங்கள் எடுத்துக் கொண்டுபோய் விட்டு தேவைப்படும்போது கொடுக்கிறேன் என்றால் உன்னுடைய (மத்திய அரசு) வேலை என்ன? உங்களுக்கு ஒரு வேலையும் இல்லையா? நீங்கள் எதற்காக என் வரியை எடுத்துக் கொண்டு போய் பிறகு திருப்பி தரணும். அந்த வரியை நீயே வைத்துக் கொண்டு நிர்வாகம் செய் என்று சொல்லத் தெரியாதா உங்களுக்கு.

nn

எங்களுடைய வரியை எடுத்துட்டு போயிட்டு பிறகு பேரிடர் காலங்களில் நாங்கள் கெஞ்சனும். அப்புறம் நீங்க கொடுக்கணும். இது என்ன உங்க காசா? எல்ஐசியின் 60% பங்கு வித்தாச்சு. இந்த நாட்டின் பொதுச்சொத்து மூலம் வருவாய் பெருகும் என்று மத்திய அரசுக்கு ஏதாவது உள்ளதா? பேரிடர் காலங்களில் கூட நாங்கள் உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டுமா?

இதுவே குஜராத்தில், பீகாரில், உத்திரப்பிரதேசத்தில் வெள்ளம், புயல் என்றால் இப்படி கேவலமாக பேசிக் கொண்டிருப்பீர்களா? உடனே பறந்து வருவீர்கள். அடுத்த நொடிக்கு 500 கோடி அறிவிப்பீர்கள். நான் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 40 காசு திருப்பி தருவீங்க. ஆனால் அவன் ஒரு ரூபாய் கொடுக்கிறான் மூன்று ரூபாய் என்பது காசை திருப்பிக் கொடுக்கிறார்கள். அப்போ இந்தி பேசுபவன்தான் இந்தியனா?. இந்தி பேசுகின்ற மாநிலங்கள் தான் இந்தியாவா.

நிதியமைச்சர் தூத்துக்குடி வந்தாங்கல்ல நானும்தானே களத்தில் நின்றேன். ஊரு ஊரா போய் பார்த்தேன். ஆனால் இவர்கள் என்ன பண்ணினார்கள் சாலையில் ஒரு ஓரமா வைத்த பதாகையில் பாதிக்கப்பட்ட இடங்களை போட்டோ எடுத்து ஒட்டி, ஒரு பந்தலை போட்டு அதை பார்வையிட்டு விட்டு செல்கிறார். அப்படி பார்ப்பதற்கு அங்கிருந்து வாட்ஸ் அப்பில் அனுப்ப சொல்லி பார்த்து விடலாமே. எதுக்கு வர்றீங்க. இதேதான் ஓகி புயலின் போது பிரதமர் மோடியும் பண்ணினார். ஒரு இடத்தில் பதாகையில் ஒட்டி வைத்திருந்த படங்களை பார்த்துவிட்டு போய்விட்டார். அதற்கு எதற்கு நீங்கள் வருகிறீர்கள். இன்ஸ்டாகிராம் இருக்கிறது, இன்டர்நெட் இருக்கிறது, வாட்ஸ் அப் இருக்கிறது.  அதில் பார்த்துக் கொள்ளலாமே. எங்களை மாற்றான் தாயாகக் கூட இல்லை, எங்களை உயிராகவே மதிப்பது கிடையாது. மோடிக்கு திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை திறந்து வைக்க நேரம் இருக்கிறது. ஆனால் வெள்ளத்தில் குறைந்தது 50 பேர் செத்து போனோம். தூத்துக்குடி என்ற ஒரு மாவட்டமே அழிந்து போய்விட்டது. அதை வந்து பார்வையிட முடியாதா?'' என்றார்.

Next Story

“ஆளுநருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்னவென்று தெரியுமா” - சீமான் காட்டம்

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

'Does the governor know what people's problem is?'-Seeman speech

 

தமிழக ஆளுநர் மீது தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், நேற்று தமிழக ஆளுநர் பத்துக்கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள மசோதாக்களை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.

 

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தொடர்பான மசோதா; மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா; வேளாண் பல்கலைக்கழக திருத்த மசோதா; சென்னை பல்கலைக்கழக திருத்த மசோதா; சட்டப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா; அன்னை தெரசா பல்கலைக்கழக திருத்த மசோதா; மீன்வளம், கால்நடை பல்கலைக்கழக திருத்த மசோதா; தமிழ்ப் பல்கலைக்கழக திருத்த மசோதா; அண்ணாமலை பல்கலைக்கழக திருத்த மசோதா; பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்பட வகை செய்யும் மசோதா ஆகியவை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

'Does the governor know what people's problem is?'-Seeman speech

 

ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ''சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக போராடிய உழவர்கள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. நாட்டில் கொள்ளை அடிப்பவர்கள், கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு  தப்பியோடும் பெரிய பெரிய முதலாளிகளை எல்லாம் விட்டுவிட்டு போராடிய உழவர்கள் மீது குண்டாஸ் போடுகிறீர்கள். குண்டாஸ் போடும் அளவிற்கு விவசாயிகள் என்ன தவறு செய்தார்கள். தமிழ்நாட்டில் சிப்காட்டால் இதுவரை என்ன வளர்ச்சி வந்துவிட்டது. தமிழகத்தில் விளை நிலமே குறைவுதான். இதில் சிப்காட்டிற்காக விளை நிலத்தை கொடுத்தால் வேலை தருகிறோம் என்கிறார்கள். சம்பளம் தருகிறார்கள். சம்பளத்தை வைத்து மூன்று வேளை சாப்பிடுவோம். ஆனால் அந்த சாப்பாடு எங்கிருந்து வரும் என்ற அடிப்படை கேள்வி இருக்கிறது. அரிசி பருப்பை எந்த தொழிற்சாலையும் உற்பத்தி செய்ய முடியாதுதானே. அந்த விளை நிலத்தை பறித்துக் கொண்டால் மண்ணை சாப்பிடுவார்களா அல்லது கல்லை சாப்பிடுவார்களா? எத்தனை சிப்காட் இருக்கு நாட்டில், அதனால் ஏற்பட்ட வளர்ச்சி முன்னேற்றம் என்னவென்று சொல்லுங்க.

 

மக்களில் இருந்து ஒருவர் அதிகாரத்திற்கு வர வேண்டும். மக்களோடு மக்களாக வளர்ந்து மக்களின் போராட்டத்தில் கலந்து, மக்களுடன் வேர்வையில் நின்று, கட்டிப்பிடிச்சு கண்ணீரை துடைச்சு நிற்பவனை அதிகாரத்தில் வைத்தால் அவருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியும். ஆளுநருக்கு மக்கள் பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? எதுவாக இருந்தாலும் எட்டு கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் சார்ந்து சட்டங்கள் திட்டங்கள் போட்டு அனுப்பினால் கையெழுத்து போட வேண்டும் அதுதான் உங்க (ஆளுநர்) வேலை. சம்பளம் என்கிட்ட வாங்கிகிட்டு சண்டியர் தனம் பண்ணிட்டு இருந்தா என்ன அர்த்தம். இருக்க வீடு இல்லாமல் மக்கள் இருக்காங்க. ஆளுநருக்கு 150 ஏக்கரில் வீடு. பாஜக ஆளாத மாநிலங்களில் இதுபோன்ற ஆளுநர்களை அனுப்பி மாநில அரசுகளுக்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.