Skip to main content

விபத்தில் இளைஞர் பலி - பள்ளமான சாலைகளை சரிசெய்ய ரூ.1.5 கோடி ஒதுக்கீடு!

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

jkl

 

சென்னையில் தற்போது பெய்து வரும் மழையால் பல இடங்களில் சாலையில் பள்ளம், விரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

 

சின்னமலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளமான சாலையில் இரண்டு சக்கர வாகனம் சறுக்கி அருகில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் அடியில் வாகனம் சிக்கியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில், சென்னையில் உள்ள 10 மண்டலத்தில் உள்ள குறைபாடான சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய 1.5 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பள்ளமான, குறைபாடு உடைய சாலைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் பயங்கர தீ விபத்து!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Coimbatore Corporation Vellalur fire incident

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் நேற்று மாலை திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

அதே சமயம் ஹிட்டாட்சி மற்றும் பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் மற்ற இடங்களுக்கும் தீ பரவாமலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இரண்டு டிரோன்கள் மூலம் தீப்பற்றி எரியும் இடங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Attention those who are waiting for government jobs; Major announcement release

தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 1,933 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர், வரைவாளர், துப்புரவு ஆய்வாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.