Skip to main content

'புதையல் எடுப்பதாக ரூ.11 லட்சம் மோசடி'-ஜோதிடர் மீது ஆட்டோ ஓட்டுநர் புகார்

Published on 03/02/2025 | Edited on 03/02/2025

 

'Rs. 11 lakh scam of taking treasure'- Auto driver complains to Superintendent of Police office

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பலகள்பாவி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சங்கர். இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு  கடந்த 2023 ஆம்  ஆண்டு டிசம்பர் 12 ந் தேதி விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவரது  உறவினர் மூலம் ஜோதிடர் எனக்கூறி தர்மபுரியை சேர்ந்த  உதயகுமார் என்பவர் பழக்கமானார். அவர் சங்கரிடம் உங்கள் வீட்டில் செய்வினை உள்ளது. இதனை எடுக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதற்கு  பூஜைகள் செய்ய வேண்டும் எனக்கோரி சங்கரிடம் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணத்தைப்  பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை வெளியே எடுக்காவிட்டால் நீ இறந்து விடுவாய் எனக் கூறிய ஜோதிடர் பல்வேறு இடங்களில் பூஜைகள் செய்து புதையல் எடுத்துக் கொடுத்துள்ளதாக பல்வேறு வீடியோக்களை காண்பித்து அவர்களை ஏமாற்றி உள்ளார்.

புதையல் எடுக்க பணிகளை மேற்கொள்ளும் போது புதையல்  எடுக்கவிடாமல் யாரோ செய்வினை செய்துள்ளனர். அதற்கு ஆடு, மாடு, பன்றி ஆகியவற்றை பலி கொடுக்க வேண்டும் என பல்வேறு காரணங்களைக் கூறி ஆட்டோ ஓட்டுநர் சங்கரிடம் மீண்டும் பணம் வாங்கியுள்ளார். அதன் பின்னர் பல்வேறு காரணங்களை கூறி பல தவணைகளாக ஆட்டோ ஓட்டுநர் சங்கரிடம்  ஜோதிடர் கூகுள் பே மற்றும் போன் பே மூலமாகவும், நேரடியாகவும் ரூ 11 லட்சம்  வரை பணம் பெற்று உள்ளார். அதன் பின்னர் உங்கள் வீட்டில் பூஜை செய்யும் போது ஒருவருக்கு மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வந்து உயிருக்குப் போராடி வருவதாகக் கூறி பணம் கேட்டு ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார். அதக்கு சங்கர் மேலும் என்னிடம் பணம் இல்லை நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம், பணம் திருப்பி கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
இல்லையென்றால் காவல்துறையில் புகார் கொடுப்பதாகக் கூறியுள்ளார்

அதற்கு அந்த ஜோதிடர் என் மீது புகார் கொடுத்தால் உனக்கு தான் பிரச்சனை என்று கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பணத்தை மீட்டுத் தரக்கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.புகாரைப் பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்