/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1802.jpg)
ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் தலைமை மீது ஆசையில்லை என சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார், அது தொண்டர்களிடம் எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை கே.கே.நகரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "சுயநலம் கொண்ட நபர்களிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி தான். எனவே, 99% கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறார்கள். தொண்டர்கள் என்னிடம் உள்ளனர் என்று எதுவுமே புரியாத நபரை போல வாய்ப்பாடு பாடிக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் பங்கேற்க முடியாததற்கு காரணம் போக்குவரத்து நெரிசல் எனக் குழந்தைத் தனமான பதிலைச் சொல்கிறார்.
எனவே, அவர் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு உண்டான தகுதியை இழந்து விட்டார். அதிமுக யாருடைய அப்பா வீட்டு சொத்து என கேட்கிறார் ஓ.பி.எஸ். அவர் ஏன் அவருடைய சொந்த வீட்டில் திருடினார்? ஓ.பி.எஸ் நிராயுதபாணியாக நிற்பதால் தான் இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார். தலைமை மேல் ஆசை இல்லை என்று அவர் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்தான். அது தொண்டர்களிடம் எடுபடாது. அவருடைய இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல் தான் தற்போதைய நடவடிக்கைகள் எல்லாம்.
சாமானிய தொண்டனாக இருந்து எம்.எல்.ஏ. ஆனவர் உசிலம்பட்டி ஐயப்பன். திருவிழாவில் மிட்டாயை காட்டி சிலர் குழந்தைகளை அழைத்துச் சென்று விடுவர். அப்படித்தான் தவறான வழியில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)