
வெடிக்காத குண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ளது அனுமந்தபுரம். இப்பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் இயங்கி வந்தது. தற்போது ராணுவ முகாமானது செயல்படவில்லை. இந்நிலையில் பயிற்சி இராணுவ முகாமை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் செயலிழந்த நிலையில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் குண்டுகள் கிடப்பதாக அப்பகுதியில் கால்நடைகள் மேய்ப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் தாம்பரம் மாவட்டக் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் காவல் ஆய்வாளர் முத்து, சுப்பிரமணி, கீதா மற்றும் பல காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து அங்கு ராக்கெட் லாஞ்சர் கிடந்ததை உறுதி செய்தனர். பிறகு, துறை சார்ந்த ராணுவ கமெண்டோ அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அதனை ஆய்வு செய்து அவற்றை செயலிழக்கச் செய்வதாக தெரிவித்தனர்.