திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்தில் உள்ள பாமுத்தம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 6ந்தேதி காலை தான் திறக்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் அறையை திறந்து உள்ளே சென்றபோது உள்ளேயிருந்த பொருட்கள் கலைந்தும், சில பொருட்கள் உடைக்கப்பட்டும் இருந்தது. இதனை கண்டு தலைமையாசிரியர் அதிர்ச்சியாகியுள்ளார். அந்த அறையின் பின் பக்க ஜன்னல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்துள்ளனர். பள்ளியின் தலைமையாசிரியர் அறையில் இருந்த பள்ளிக்கு சொந்தமான ரேடியோ ஆம்பளிபயர் பாக்ஸ் உட்பட சில எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் வைத்திருந்துள்ளனர். அவைகள் திருடுப்போய்வுள்ளது. அதோடு சில பேப்பர்கள் கிழித்து போடப்பட்டும் இருந்துள்ளன. இதுயெல்லாம் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஆவணங்கள் என தெரியவந்துள்ளது.
இதைக்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களும் திருப்பத்தூர் கிராமிய போலீஸார் புகார் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் தலைமையாசிரியர் சார்பில் புகார் எழுதி தரப்பட்டது. அவர்கள் அதனை பார்த்துவிட்டு விசாரணையை துங்கியுள்ளனர். பள்ளிக்குள் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைத்திருக்க போவதில்லை. சில எலக்ட்ரிக் பொருட்கள் மட்டும் திருடு போய்வுள்ளது. அதற்காக தான் இந்த திருடு நடந்ததா ? அல்லது வேறு ஏதாவது காரணம்மா என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். அதே நேரத்தில் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.