Skip to main content

கத்தியை காட்டி கூகுள் பே மூலம் வழிப்பறி; 5 பேர் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
robbery by Google Pay; 5 people arrested

காஞ்சிபுரத்தில் சாலையில் செல்வோரிடம் கத்தியைக் காட்டி கூகுள் பே ஆப் மூலம் பணத்தை வழிப்பறி செய்த 5 நபர்கள் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரங்களில் சாலையில் வருவோர் செல்வோரை மர்ம கும்பல் ஒன்று கத்தியை காட்டி மிரட்டி கூகுள் பே மூலம் வழிப்பறி செய்வதாக அதிகப்படியான புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழிப்பறி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கூகுள் பே ஆப் மூலம் வழிப்பறி  செய்து அதன் மூலம் இரண்டு லட்சம் வரை கொள்ளையடித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; அதிமுக வழக்கு

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
counterfeiting liquor; AIADMK case

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 39 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கள்ளச்சாராயம் அருந்திய சம்பவம் தொடர்பாக 90-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

counterfeiting liquor; AIADMK case

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என அதிமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பதுரை இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்தவர்கள் உடலுக்கு நேர்மையாக பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்; கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது நாளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல்கள் தகனம் செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் தீவிர விசாரணை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Serious investigation of the arrested illicit

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளச்சாரயா வியாபாரிகள் கண்ணுகுட்டி(எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.