Robbery of 30 lakh rupees in a financial institution... again in Chennai!

கோப்புப்படம்

சென்னைஅரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி சுமார் 72 மணி நேரத்தில் 32 கிலோ தங்க நகைகளை மீட்டு உள்ளனர். இந்நிலையில் இதேபோல் சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Advertisment

சென்னையில் உள்ள 'ஓசோன் கேபிடல்' நிதி நிறுவனத்தில் ஊழியர்களை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வடபழனி மன்னார் முதலி தெருவில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் முகமூடியுடன் பணத்தை கொள்ளையடித்துள்ளது. ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை கத்தி முனையில் கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கொள்ளையில் தொடர்புடைய விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இக்பால் என்ற நபர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மற்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் மீண்டும் ஒரு நிதி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.