Skip to main content

அரை மணி நேர மழையில் கரைந்தோடிய 6 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

 A road worth Rs 6 lakh was washed away after half an hour of rain; Public charges

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட கான்கிரீட் சாலையானது அரை மணி நேர மழைக்கே கரைந்து ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

 

ஆரணி புறநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டது. அதன்படி ஏற்கனவே இருந்த சாலையின் அளவை கணக்கெடுக்காமலும், அதே நேரம் பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு சீரமைப்பு செய்யாமலும் அதன் மேலேயே சிமெண்ட் மற்றும் கற்களால் சாலை அமைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

 

இந்நிலையில் நேற்று மாலை சாலை அமைக்கப்பட்ட பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அந்த கான்கிரீட் சாலையானது கரைந்து ஓடியது. தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

Next Story

ஏற்றப்பட்டது 'மகாதீபம்'- பக்தியில் ஆர்ப்பரித்த திருவண்ணாமலை

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

Loaded 'Mahadeepam' - Tiruvannamalai chanted with devotion

 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கருவறை முன்புள்ள மண்டபத்தில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காகக் கோயிலுக்குள் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் தற்போது  ஏற்றப்பட்டுள்ளது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தீபத்தை தரிசித்தனர். இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரிவதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய்யும், 1500 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தீபத் திருவிழாவைக் காண்பதற்காக 35 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சுமார் 14 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு உதவுதற்காக அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள 044-28447703, 044-28447701, 8939686742 என்ற தொலைபேசி எண்கள் காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகள் காணாமல் போனால் அது குறித்து தகவல் தெரிவிக்க 9342116232 - 8438208003 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.