Skip to main content

குடிதண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

கீரமங்கலம் பர்மா காலனி பகுதிக்கு குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றும் பழுதான மின்மோட்டாரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.

 

The people stormed the road to the demolition of the people drinking water in keramangalam


 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பகுதிக்கு குடிதண்ணீர் கொடுப்பதற்காக சுமார் 10 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து குடிதண்ணீர் வழக்கி வருகின்றனர். இந்த நிலையில் மின் பற்றாக்குறை மற்றும் மோட்டார்கள் பழுது காரணமாக அடிக்கடி ஒவ்வொரு பகுதிக்கும் குடிதண்ணீர் பிரச்சணை ஏற்பட்டு வருகிறது. அதே போல 2 வது வார்டு பர்மா காலனி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிதண்ணீர் ஏற்றும் நீர்மூழ்கி மோட்டார் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டதால் 15 நாட்களாக குடிதண்ணீர் கிடைக்கவில்லை. நீர்மூழ்கி மோட்டார் பழுது நீக்கப்பட்டு குடிதண்ணீர் கிடைக்கும் என்று காத்திருந்த பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அருகில் உள்ள செரியலூர் இனாம் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய ஆழ்குகுழாய் கிணறுகளில் தண்ணீர் எடுத்துள்ளனர். 
 

The people stormed the road to the demolition of the people drinking water in keramangalam


 

இந்த நிலையில் 15 நாட்களாக நீர்மூழ்கி மோட்டார் பழுது நீக்கவில்லை என்பதாலும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அப்பகுதி பொதுமக்கள் பட்டுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் செய்தனர். அதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு வந்த கீரமங்கலம் போலிசார் சமாதானம் செய்து விரைவில் குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; பீதியில் பொதுமக்கள்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
One person passed away in a wasp sting near Chengalpattu.

செங்கல்பட்டு மாவட்டம் புலியூர் பஞ்சாயத்து அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரராகவன் என்ற முதியவர். இந்த நிலையில், அச்சரவாக்கம் கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் விறகு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, குளவி ஒன்று வீரராகவனை கொட்டியுள்ளது. இதனால் பதறிப்போன வீரராகவனை அப்பகுதியினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிக்கிச்சைகாக அனுமதித்தனர். ஆனால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வீரராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில் வீரராகவன் குளவி கொட்டி இறந்ததை அறிந்த புலியூர் ஊராட்சி மக்கள் அந்தப் பகுதியில் 100 நாள் வேலை செய்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் குளவிகள் கூடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் செல்வதற்கு மச்சம் அடைகின்றனர். குறிப்பாக 100 நாள் வேலை செய்வதற்கு பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Further increase in water flow in Cauvery river

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (22.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (21.07.2024) மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் 7வது  நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.