Skip to main content

தரைப்பாலம் மூழ்கியதால் மூடப்பட்ட சாலை வழித்தடம்! (படங்கள்)

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. இந்தப் பருவமழையால் சென்னையில் உள்ள பல்வேறு முக்கியமான இடங்களிலும் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தேங்கிய தண்ணீரை ஆங்காங்கே மோட்டார் மூலம் வெளியேற்றியும் வருகின்றனர். இருந்தபோதிலும் சில தாழ்வான பகுதிகளில் தொடர் மழை காரணமாக தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியுள்ளது.

 

சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் அதிக கனமழை பொழிவதால் சுரங்கப்பாதை, தாழ்வான சாலை, தரைப்பாலம் போன்றவை முற்றிலுமாக நீரில் மூழ்கிவிடுகின்றன. அதனால் குறிப்பிட்ட இடங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அந்தவகையில், கோயம்பேடு - மதுரவாயல் சாலையிலிருந்து பாடி குப்பம் செல்லும் கூவம் நதி தரைப்பாலம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பாலம் மூடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்த பாலம்; பொதுமக்கள் அதிர்ச்சி!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
The bridge collapsed before the opening ceremony in bihar

பீகார் மாநிலத்தில் திறப்பு விழாவுக்கு முன்பே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இம்மாநிலம், அராரியா மாவட்டத்தில் பத்ரா நதிக்கு குறுக்கே பத்கியா காட் எனும் பகுதியில் ரூ.12 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த மேம்பாலp பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த மேம்பால திறப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த மேம்பாலம் நேற்று (18-06-24) திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை அங்கிருந்த சிலர், தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த விசாரணையில், தரமற்ற கட்டுமானத்தால் இந்த மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆற்றில் அடித்துச் சென்ற 8 கோடி ரூபாய் பாலம்; திறப்பு விழாவிற்கு முன்பே அதிர்ச்சி!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
8 crore rupees bridge washed away in the river; Shock before the opening ceremony

கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்டப்பட முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டுமான பணிகளுக்கு பின் மொத்தமாக 7 கோடியே 89 லட்சம் ரூபாய் என கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வந்த மக்களுக்கு இந்த பாலம் பேருதவியாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில் திறப்பு விழா இன்னும் சில நாட்களில் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் திடீரென பாலம் இடிந்து விழும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதால் இடிந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுத் திறப்பு விழாவிற்கு காத்திருந்த பாலம் சரிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லும் இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.