Skip to main content

குடிதண்ணீர் கேட்டு சாலை மறியல்!

Published on 14/11/2021 | Edited on 15/11/2021

 

Road block asking for drinking water!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. இதில் 24 குடியிருப்பில் 18 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள். இதில் 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். மற்ற அனைவரும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். இவர்களின் வீட்டு வாடகை அவர்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிதண்ணீர் சரியாகக் கிடைக்காமல், இவர்கள் சிரமம் அடைந்துவருவதாகவும், அதேபோல் கழிப்பறை கழிவுகள் வெளியே செல்ல முடியால் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு அருகே தேங்கியிருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது என்றும் சம்பந்தபட்ட பி.எஸ்.என்.எல். அலுவலர்களிடம் புகார் கூறியுள்ளனர்.

 

ஆனால், குடியிருப்பைப் பராமரிக்காமல் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொரு முறையும் மெத்தனமாக பதிலைக் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (14.11.2021), இரண்டு நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை; குடிதண்ணீர் வேண்டும் எனக் குடியிருப்பவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு சம்மந்தபட்ட அலுவலர், பணம் வசூல் செய்து நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள், குடியிருப்பு வெளியே உள்ள கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரு மாதமாக குடி தண்ணீர் வரவில்லை என புகார்'- 24 மணி நேரத்தில் தீர்வு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

'No drinking water for a month'  Legislator who SOLUTION within 24 hours!

திருச்சி மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் இனிகோ இருதயராஜ். சட்டமன்றத்தில் திருச்சிக்காக குரல் கொடுத்தது முதல் தொகுதி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியும் வருகிறார்.

 

இந்த நிலையில் திருச்சி விமான நிலையம் அருகே சுதானா பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல குடி தண்ணீர் வரவில்லை என நேற்று (07/08/2021) கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் புகார் அளித்த 24 மணி நேரத்தில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து நல்ல குடி தண்ணீரை அப்பகுதி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளார்.

 

சட்டமன்ற உறுப்பினரின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். 

 

Next Story

குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

water problem peoples corporation officers cuddalore district virudhachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் உள்ள அப்துல் கலாம் ஆசாத் வீதி, புதுப்பேட்டை, பங்களா வீதி உள்ளிட்ட மூன்று தெருக்களில் சுமார் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கினால் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதிக்குக் குடிநீர் வரவில்லை என்றும், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி காலிக் குடங்களுடன் தெருக்களில் அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களைக் கண்டுகொள்ளாத நகராட்சியைக் கண்டித்தும், நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்வதற்கு மட்டும் காலதாமதம் பார்க்காமல் வருகின்ற நிலையில், ஒரு மாத காலமாக குடிநீர் பற்றாக்குறை பற்றி தகவல் அளித்தும், கண்டுகொள்ளாததைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 

தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். 

 

இதேபோல் 15- ஆவது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர், பெரியார் நகர் மற்றும் ஏனாதிமேடு பகுதிகளில் கடந்த மூன்று மாதமாகச் சரியான நேரத்தில், முறையாகக் குடிநீர் வழங்கவில்லை என்றும், நேற்று வழங்கப்பட்ட குடிநீர் சாக்கடை கலந்து துர்நாற்றம் வீசியதாகவும் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கைகளை மனுவாக சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் அளித்தனர். சார் ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.