
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசனை நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதற்கான ஆணையை ஆளுநரிடம் நேரில் பெற்றுக் கொண்டார் ஆர்.எம்.கதிரேசன். இவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.கதிரேசன் கல்வித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.