Skip to main content

“மதுரை சிறையில் கலவரம் நடக்கவில்லை!” -சிறை அதிகாரிகள் மீது காவல்துறை கரிசனம்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019


“கைதிகள் கலவரத்துக்குப் பின்னும் மதுரை மத்திய சிறைச்சாலை இன்னும் திருந்தியபாடில்லை..” என்று ‘உச்’ கொட்டுகிறார்கள் அச்சிறை வட்டாரத்தில்.

 

என்ன வருத்தமாம்?

 

மதுரை மத்திய சிறைக்குள்  கண்காணிப்பு கேமராவை உடைத்தும், குழாய், தண்ணீர் தொட்டிகளை சேதப்படுத்தியும். விசாரணைக் கைதிகளின் பிளாக் 2 மற்றும் 3-ல் உள்ள கைதிகள், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். சிறைக்குள் நடந்த கலவரம் என்பதால், சிறை கண்காணிப்பாளரோ, சிறை வார்டனோதான், காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால், சிறை புறக்காவல்நிலைய ஏட்டு பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில்தான் கரிமேடு காவல்நிலையம், அடையாளம் தெரியாத கைதிகள் என 25 பேர் மீது, அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சிறை விதிமுறைகளை மீறினார்கள் என்று 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது. சிறைக்கு வெளியே  கேட்டில் இருந்த போலீஸ் ஏட்டுக்கு, சிறைக்குள் நடந்த கலவரம் குறித்து என்ன தெரியும்? அவர் எந்த அடிப்படையில் புகார் கொடுத்தார்?

 

 "The riots in Madurai jail did not happen!"

 

மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர்தான், மதுரை மத்திய சிறைக்குள் இரவிலும் விசாரணை நடத்தினார்கள். சட்ட ரீதியாக உதவுகிறோம் என, யாரோ தந்த ஆலோசனையை அப்படியே ஏற்று, மதுரை மத்திய சிறை தரப்பில் கலவரம் குறித்து புகார் அளிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. அதே நேரத்தில், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிறைக்கலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா செல்ல வேண்டியதாயிற்று. இந்தச் சூழ்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது எப்.ஐ.ஆர்.கூட பதிவாகாமல் இருந்தால் சிறை அதிகாரிகளுக்குச் சிக்கல் வரும் என்பதால்,  ஓ.பி. ஏட்டு பாலசுப்பிரமணியனை புகார் கொடுக்க வைத்து, முதல் தகவல் அறிக்கையை கரிமேடு காவல் நிலையம் பதிவு செய்திருக்கிறது.  ஏனென்றால், சிறை புறக்காவல் நிலையம் நேரடியாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது.  

 

 "The riots in Madurai jail did not happen!"

 

மதுரை கரிமேடு காவல்நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரனை தொடர்புகொண்டோம். “சிறையில் கலவரமே நடக்கவில்லை.” என்று ஒரே போடாகப் போட்ட அவர் “ஆமா.. எங்க போலீஸ்காரர்தான் புகார் கொடுத்திருக்கிறார். பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நான்கூட எப்.ஐ.ஆர். போடலாம். பப்ளிக் புகார் கொடுத்தாலும் எப்.ஐ.ஆர். போடலாம். ஜெயிலில் நடக்கின்ற சம்பவங்களை எங்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தானே ஏட்டு அங்கே புறக்காவல் பணியில் இருக்கிறார். அன்றைக்கு நடந்த சம்பவத்துக்கு ஜெயிலில் இருந்து பெட்டிஷன் வரல. கைதிகள் பப்ளிக்கை டிஸ்டர்ப் பண்ணுனதுனால, நாங்களே எப்.ஐ.ஆர். போட்டுக்கிட்டோம். சிறைத்துறை எஸ்.பி.,  வார்டனெல்லாம், விசாரணை முடிந்ததற்குப் பிறகு, யார் யாரெல்லாம் அக்யூஸ்ட்ன்னு ஃபிக்ஸ் பண்ணிட்டு, நீதிமன்றம் போயிட்டு, அப்புறம்  விசாரணைக்கு வருவாங்க.  என்னென்ன டேமேஜ்னு ஜெயில் சம்பந்தப்பட்டவங்க ரிப்போர்ட் கொடுப்பாங்க. அதுக்கு தனி எப்.ஐ.ஆர். போடுவோம். அந்த நேரத்துல, இப்ப போட்டிருக்கிற எப்.ஐ.ஆரை திரும்பப் பெறுவோம். அவங்க எப்.ஐ.ஆரை வச்சு வழக்கை நடத்துவோம்.” என்று  ‘தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல’ விளக்கம் தந்தார்.

   

 "The riots in Madurai jail did not happen!"

 

“கலவரம் செய்த கைதிகளுக்குச் சாதகமாக சிறைத்துறை அதிகாரிகள் செயல்படுவதும் சிறைத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் தமிழக காவல்துறை செயல்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது. கலவரத்தின் அதிகபட்ச நடவடிக்கை என்பது, ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாகத்தான் இருக்கும்.” என, சிறைவட்டாரத்தில் நல்லுள்ளம் கொண்டவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மது போதையில் போலீசார் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Alcoholic attack on police; video goes viral

அதீத மதுபோதையில் இளைஞர் ஒருவர் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மாடம்பாக்கம் பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது நூற்றாஞ்சேரி. இந்த பகுதியில் உள்ள ஜோதி நகர் என்ற இடத்தில் நேற்று இரவு மதுபோதையில் உணவகத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் உணவகத்திலேயே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உணவகத்தில் ஆம்லெட் கேட்டுள்ளார். உணவக ஊழியர்கள் ஆம்லெட் தராததால் ஆத்திரமடைந்த போதை நபர் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்தார். 

இளைஞர் ஒருவர் மது போதையில் நடு சாலையில் அமர்ந்திருப்பது குறித்து தகவலறிந்து அங்கு வந்து சேலையூர் காவல் நிலைய இரவு நேர காவலர் கந்தன் அவரை அப்புறப்படுத்த முயன்றபோது காவலரை காலால் தாக்கி போதை இளைஞர் அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் விரல் ஆக்கி வருகிறது.

Next Story

சிறுமிகளை திருமணம் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
nn

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கார்த்திகேயன் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த சிறுமி தற்போது மூன்று மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் கோபியை சேர்ந்த ஆசிப் (28) என்பவரும் சிறுமியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதாக சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கிருஷ்ணவேணி கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆசிப் சிறுமியை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஆசிப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.