![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/JoDT60jsBosb3p6vtAx0Hg9BPofw-mYISWw9Pd2N2Bc/1551810178/sites/default/files/inline-images/93387e5f-854e-49fc-837b-a49f1abe20b3.jpg)
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிற்காக அரசியல்கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசு துறை அதிகாரிகள் இடமாற்றங்களை செய்து வருகிறது தேர்தல் துறை.
இதன்படி மாவட்ட ஆட்சியர்கள் முதல் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் வருவாய்துறையினரை மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யப்பட்டதால் தமிழகம முழுவதும் வருவாய் துறையினர் உள்ளிருப்பு போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
![protest](http://image.nakkheeran.in/cdn/farfuture/l_o4Vc1mvm27xH34F7LdD9tFeHXdrFbGxKE2xrYkBZU/1551810204/sites/default/files/inline-images/4ee8396a-210d-4512-a981-78870b7536d9.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ள வருவாய் துறையினர் மாவட்டம் தாண்டிய இடமாறுதலை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கிய நிலையில் மனு நீதி நாளில் மனு கொடுக்க வந்த பொதுமக்களின் மனுக்களை பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.
மாலை வரை சிலர் மனுக்களை பதிவு செய்ததால் மக்களும் பசியோடும் பட்டினியோடும் காத்திருந்து மனுக்களை கொடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்றும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுவதுடன் பணிகளும் முடங்கியுள்ளது.