Skip to main content

கலெக்டா் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஒய்வு பெற்ற ஆசிரியர்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

நாகா்கோவில் வடசேரி அரசு நிதி உதவியுடன் நடக்கும்  ஓரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் லாரன்ஸ். அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் மூன்று போ் மாணவிகளுக்கு பாலியியல் தொந்தரவு செய்வதோடு அந்த மாணவிகளை வித விதமாக செல்போனில் படம் புடித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை ஆசிரியா் லாரன்ஸ் தட்டிக்கேட்டு அந்த ஆசிரியா்களுடன் தகராறு செய்து வந்தார். மேலும் இது சம்மந்தமாக  தலைமையாசிரியா் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அந்த ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம்.  இதனால் லாரன்ஸ் அந்த மாணவிகளின் பெற்றோர்களிடம் கூறியதால் பெற்றோர்கள் பள்ளியில் வந்து தகராறு செய்ததோடு காவல் நிலையம் வரை பிரச்சினை சென்றது.

 

 

 

இதனால் பள்ளியின் பெயரை லாரன்ஸ் கெடுத்துவிட்டதாக கூறி பள்ளி நிர்வாகமும் தலைமையாசிரியரும் லாரன்ஸ்க்கு நெருக்கடி கொடுத்து வந்ததால் அதை சமாளிக்க முடியாத அவா் விருப்ப ஓய்வு பெற்றார். மேலும் அவா் விருப்ப ஓய்வு பெற்றதற்கான பணப்பலனையும் பள்ளி நிர்வாகம் வாங்கி கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கஷ்டப்பட்டு வந்த லாரன்ஸ் பணப்பலனை நம்பி வட்டிக்கு கடன் வாங்கினார். 15 மாதமாக கடன் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவா்கள் லாரன்ஸ்க்கு நெருக்கடி கொடுத்தனா். இந்த நிலையில் பணப்பலனை கொடுக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த லாரன்ஸ் இன்று கலெக்டா் அலுவலகத்தில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து தடுத்து நிறுத்தி பூச்சி மருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனா். மேலும் லாரன்ஸை பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் கலெக்டா் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு இன்று நடக்கிறது!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Competitive Examination for Secondary Teachers is happening today!

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி அறிவித்தது. அப்போது ஜூன் மாதம் 23 ஆம் தேதி (23.06.2024) இந்த தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் இடைநிலை ஆசிரியர் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வானது ஜூலை 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இத்தேர்வினை எழுத 26 ஆயிரத்து 510 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டது. இதனையொட்டி போட்டித் தேர்வர்கள் கடந்த 2 ஆம் தேதி (02.07.2024) முதல் அவர்களது பயனர் குறியீடு (User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

அதே சமயம் கூடுதலாக 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு இன்று (21.07.2024) நடைபெற உள்ளது. இதற்காக  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு இந்த தேர்வு தொடங்க உள்ளது. 

Next Story

பள்ளிச் சுவர் இடிந்து விபத்து; அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
School wall collapse accident in gujarat

குஜராத் மாநிலம், வதோதரா பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நேற்று வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது வகுப்பறையின் சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. 

இதில் சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனைக் கண்ட மற்ற மாணவர்கள் பதற்றமடைந்து, வகுப்பறையில் இருந்து வெளியேறினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஆசிரியர்கள், மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வதோதரா தீயணைப்பு துறையினர், சுவர் இடிந்து விழுந்ததில் கீழே விழுந்த மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

அதன் பிறகு மாணவர்கள் அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். இதில் படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.