Retired army man who shot his father-in-law-Civilian road block

கோப்புப்படம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வடுகப்பட்டியில் சைவராஜ் என்பவரை அவரது மருமகனான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன் சுட்டு படுகொலை செய்ததாக தகவல்கள் வெளியானது. சொத்து பிரச்சனை காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாகவே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ரவிச்சந்திரன், மாமனார்சைவராஜை மிரட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில், சைவராஜ் இதுகுறித்து காவல்துறையிலும் புகாரளித்திருந்தார். இருப்பினும் அவரிடம் இருந்த துப்பாக்கியை காவல்துறையினர் வாங்கி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரவிச்சந்திரன் வைத்திருந்ததுப்பாக்கியைபோலீசார் வாங்கிவைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், கந்தர்வக்கோட்டை போலீசாரை கண்டித்து சைவராஜின்உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment