Skip to main content

குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்; இஸ்லாமிய அமைப்பு சார்பில் வெடிவெடித்துத் கொண்டாட்டம்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Resolution against CAA law;  celebration on behalf of the Islamic organization!

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (8ஆம் தேதி) குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் நகர ஐக்கிய ஜமாத் சார்பாக வடக்குவீதி கஞ்சித்தொட்டி முனையில், சிதம்பரம் நகர ஜமாத்தார்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.


இந்நிகழ்ச்சியில் நவாப் பள்ளி வாசல், பூதக்கேணி பள்ளி வாசல், லப்பை தெரு பள்ளி வாசல் நிர்வாகிகள், தமுமுக, மமக, மஜக, முஸ்லிம் லீக், நகர ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள்  ஊராட்சி மன்ற உறுப்பினர் உசேன் முகமது, உசேன் காதர் மஸ்தான் சலாவுதீன், ஜாபர் உசேன், முகமது இக்பால், முகமது ரபிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்