வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட காட்பாடி அடுத்த பெரிய பட்டரை பகுதியில் காட்பாடியில் இருந்து அருப்புமேடு, கழிஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும். அங்குள்ளவர்கள் மருத்துவமனை, கோவில், நீதிமன்றம், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த காட்பாடிக்கு தண்டவாளத்தின் மீது கடந்து செல்லாமல் இருக்க அங்கு இரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. மழையின் காரணமாக பெரியபட்டறை அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுமோ எனப் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
பொது மக்களின் நலனை கருதி மாநகராட்சி நிர்வாகம் தேங்கியுள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.