Skip to main content

மஞ்சள் நீர்கால்வாயை மீட்டெடுக்க காஞ்சி மக்கள் கோரிக்கை..!

Published on 21/07/2018 | Edited on 27/08/2018
Kanchipuram


காஞ்சிபுரத்தில் உள்ள மஞ்சள் நீர்க் கால்வாய் தற்போது கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் பாலித்தீன் பைகள், குப்பைகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம்  காஞ்சிபுரம் நகரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நகரப் பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது.
 

 

 

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாய் காஞ்சிபுரம் நகரப் பகுதியில் மட்டும் சுமார் 8 கி.மீ தூரத்துக்குச் செல்கிறது. நகரப் பகுதியில் செல்லும் கால்வாயில் புல் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்காதவாறு அவ்வப்போது அடைப்புகள் மட்டும் சரி செய்யப்படுகின்றன. சில இடங்களில் அடைப்புகளும் முறையாக சரி செய்யப்படாமல் உள்ளன.
 

 

 

இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, கால்வாயினை சுத்தப்படுத்தி, இந்த கால்வாயின் கரைகள் மீது பிளாட்பாரம் அமைத்தால் திருக்காளிமேடு பகுதியிலிருந்து கைலாசநாதர் கோயில் வரை மிக எளிதில் சென்று வர முடியும்.
 

சென்னை பர்மா பஜார் போன்று ஒரு பக்கம் சிறிய சிறிய கடைகளும் மீதமுள்ள 20 அடியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மிதிவண்டி செல்லும் வகையில் பயன்படுத்தலாம் என 2001ல் மார்க்சிஸ்ட் கட்சியின் நகர மன்ற உறுப்பினர் மூலம் நகர வளர்ச்சி திட்டம் பற்றிய அறிக்கையில் கூறப்பட்டு, அடுத்த நகரமன்றத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படாமல் உள்ளது. 
 

 

 

இத்திட்டத்தினை அமல்படுத்தினால், நகரத்தின் பிரதான பிரச்சனையான போக்குவரத்து சிக்கல் தீர்க்கப்படும். மேலும், நகர மக்களுக்கு பொழுதுபோக்குக்கான இடம் கிடைத்துவிடும். பிளாட்பாரம் கீழே கால்வாயின் கழிவு நீர் தேங்காமல் இருக்க ஒவ்வொரு சந்திப்பிலும் சிறிய கழிவு நீரேற்று அமைப்பை உருவாக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் பொது மக்களிடம் பெறப்பட்டு நகர வளர்ச்சி பெற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்