திருச்சி ஆவின் பால் பண்ணையிலிருந்து பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் வேண்களுக்கு கடந்த சில மாதங்களாக வாடகை தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் வேன்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள் வேன்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் வாடகை நிலுவைத் தொகையை இன்றே தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்ததைதொடர்ந்து வேன் உரிமையாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.