தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் மறுபுறம் கடந்த சில நாட்களாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் தொடர்ந்து ஐந்து நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், சாரல் திருவிழாவை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று நள்ளிரவு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இன்று காலை தண்ணீர் வரத்து அதிகரிக்கப்பட்டதால் குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவி ஆகிய இடங்களில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்ததது. இந்தநிலையில் தற்பொழுது நீர் வரத்து சீரடைந்ததால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.