நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த வைணவ நூல்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட சமய நூலகம் - திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை, சட்டமன்ற அறிவிப்பின்படி மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன் அடிப்படையில் நூற்றுக்கணக்கான பழமைவாய்ந்த வைணவ நூல்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று (08.12.2021) கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜையுடன் மேம்படுத்தப்பட்ட சமய நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

Advertisment

இந்நூலகத்தில் சங்க காலம் முதல் பல்வேறு ஆச்சாரியார்கள், அறிஞர்கள் எழுதிய மிகப் பழமையான வைணவ நூல்கள் பலவற்றைத் தொகுத்து வைத்துள்ளனர். காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை செயல்படும், செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை. இந்நூலகத்திற்கு இந்து சமய நூல்களை நன்கொடையாக தர நன்கொடையாளர்களும் வரவேற்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.