Skip to main content

“மனித நேயத்தை மதிக்காத எதுவும் ஆன்மிகம் கிடையாது” - சர்ச்சில் கூடிய சமயத் தலைவர்கள்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Religious leaders said There no spirituality without respect for humanity

 

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது என கோவை சர்ச்சில் சமயத் தலைவர்கள் பேசியது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

கோவை மாவட்டம் பந்தய சாலை அருகே உள்ளது சிஎஸ்ஐ  ஆல் சோல்ஸ் (CSI ALL SOULS) தேவாலயம். இந்த தேவாலயத்தில், சமய நல்லிணக்க நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் பேராயர் வின்சென்ட், குமர குருபர சுவாமிகள், முகமது இஸ்மாயில், ஜெயின் மகாசபை நிர்வாகிகள் உள்ளிட்ட  அனைத்து சமய தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

 

அப்போது, அவர்கள் பேசும்போது ''இந்திய நாட்டில் பல்வேறு மதங்கள், ஜாதிகள், பண்பாட்டுக் கலாச்சாரங்கள், மொழிகள் போன்ற பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். இந்த பன்முகத் தன்மையை உலகில் எந்த நாட்டிலும் நாம் பார்க்க முடியாது.

 

குறிப்பாக நாட்டில் வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் தங்களது தனித்துவமான மத நம்பிக்கையில் வழிபடும் உரிமையும் உள்ளது. மேலும், பிற மதத்தவரின் வழிபாட்டு முறையை நிலைநிறுத்துவதற்கான கடமையும் நமக்கு உள்ளது. அன்பும், ஒத்துழைப்பும் நிறைந்த அமைதியான சுற்றுச்சூழல் இந்த நாட்டில் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மதிக்காத எதுவும் ஆன்மீகமாக இருக்க முடியாது. மனிதனுக்கும் கடவுளுக்குமான தொடர்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மனிதனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு அவ்வளவு  முக்கியத்துவம் கொண்டது என சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, நாட்டில் அமைதியை ஊக்குவிப்பதற்காக வெள்ளை நிற பலூன்களை ஒன்றாக வானத்தில் பறக்கவிட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம் போலிப்பாசம்” - முதல்வர் விளாசல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Everything that the PM says about liking Tamilnadu is hypocrisy

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் நேற்று (12.04.2024) ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றையும் இணைத்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், “கோவையில் கூடிய கூட்டம் டெல்லியில் ஏற்படவுள்ள நல்ல மாற்றத்திற்கான அடையாளம். அமைதியை விரும்பும் கோவைக்குள் கலவரக் கட்சியான பாஜக நுழையலாமா?. தொழில் வளர்ச்சி போய்விடாதா? நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியுமா?. கோவைக்கு வரவிருந்த மிகப்பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பாஜக. கோவை மேல் ஏன் இத்தனை வன்மம்?. தமிழ் - தமிழ்நாடு பிடிக்கும் என்று பிரதமர் பேசுவதெல்லாம், போலிப்பாசம். வெறும் வெளிவேடம். மக்களோடு மக்களாக வாழ்ந்து, கழகத்தின் கொள்கை உடன்பிறப்பாக என் அன்பு சகோதரர் ராகுல் காந்தி உருவாக்கியிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.