Published on 13/05/2021 | Edited on 13/05/2021
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில், பல்வேறு தனியார் நிறுவனங்களும், தன்னார்வலர்களும், கரோனா தடுப்பு பணிகளுக்கும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அரசு சார்பிலும் துரிதமான முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சில பெரிய நிறுவனங்கள் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று நிவாரண உதவிகளைச் செய்தும் வருகின்றன. அந்தவகையில், தற்போது கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் எரிபொருள் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த உதவித்திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கொடியசைத்துத் துவங்கி வைத்தனர்.