Skip to main content

பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!! 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

exam

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (08.04.2021) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அறிவிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வுகள் மே 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடியே நடக்குமா என்பது குறித்த கேள்வியிருந்தது. இந்நிலையில், பிளஸ் 2 செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

 

பிளஸ் 2  செய்முறை தேர்வு இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. குறிப்பாக இயற்பியல், வேதியியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், 'ஒவ்வொரு குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும் பின்னரும், அறையைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஆய்வக அறையில் உள்ள அனைத்து கருவிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். தீப்பிடிக்க கூடிய பொருட்களுக்கு அருகில் சானிடைசரை வைக்கக்கூடாது. வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட்டுக்குப் பதிலாக ப்யூரெட் பயன்படுத்தலாம். கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அவர்கள் குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வு நடத்தலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால், செய்முறை தேர்வை வேறு பள்ளியில் நடத்தலாம்' உள்ளிட்ட நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்