Relatives Struggle... Police arrest friend and investigate!

நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் காணாமல் போன சம்பவத்தில் அவரது நண்பரைப் பிடித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மனன் வீதியைச் சேர்ந்தவர் அரவிந்த். 24 வயது இளைஞரான அரவிந்த், அதே தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் நட்பாக இருந்துள்ளார். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த நிலையில், கடந்த ஞாயிறு (14.11.2021) அன்று திருமண வீட்டிற்குச் சென்ற அரவிந்த் வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். கடைசியாக வெங்கடேசனின் வீட்டுக்குத்தான் அரவிந்த் சென்றதாக அவரது குடும்பத்தார் தெரிவித்த நிலையில், வெங்கடேசனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி உறவினர்கள் குமாரபாளையம் காவல் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணராஜ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரித்துவருகின்றனர். வெங்கடேசன் மனைவியை அரவிந்த் தரக்குறைவாகப் பேசியதாகவும் அதனால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் அரவிந்தின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அரவிந்தின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில், குமாரபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.