டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாததைக்கண்டித்து அகில இந்தியஃபார்வர்டுபிளாக்கட்சி சார்பில் மதுரைபாஸ்போர்ட்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை கோச்சடை பகுதியில் உள்ளபாஸ்போர்ட்அலுவலகம் முன்பு அகில இந்தியஃபார்வர்டுபிளாக்கட்சி சார்பில் மாநிலபொதுச்செயலாளர் முன்னாள்எம்எல்ஏகதிரவன் தலைமையில், டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாததைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உசிலம்பட்டி தேவர் கல்லூரி செயலாளர்வாலாந்தூர்பாண்டியன்,வடிவேல், ஆதவன், பாஸ்கர பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்தியஅரசைகண்டித்து கோசங்களை எழுப்பினர்.