Skip to main content

வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை குறைப்பு 

 

Reduction in cylinder price for commercial use

 

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகரித்துக் காணப்பட்ட பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தற்போது குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 19ம் தேதிக்குப் பின் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து 4வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில், சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 96 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை 2141 ரூபாயிலிருந்து 2045 ரூபாயாகக் குறைக்கப்பட்டு விற்கப்படுகிறது. வீடுகளுக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி 1068 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது.