Skip to main content

சூட்கேஸை திருடிய ரெட் டி-ஷர்ட்; சென்னை கோயம்பேட்டில் கைவரிசை

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

Red T-shirt who stole the suitcase; Handline at Chennai Coimbate

 

சென்னை கோயம்பேட்டில் பட்டதாரி இளைஞர் ஒருவர் பயணி ஒருவரின் சூட்கேஸை லாவகமாக திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை  ஆவடியை சேர்ந்த வடிவேல் என்பவர் குடும்பத்தினருடன் துறையூர் செல்ல சென்னை கோயம்பேட்டில் பேருந்து ஏறியுள்ளார். அப்போது லக்கேஜ் வைக்கும் இடத்தில் சிவப்பு சூட்கேஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் 16 சவரன் நகை இருந்துள்ளது. சூட்கேஸை வைத்துவிட்டு வடிவேல் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கிச் சென்ற நிலையில், திரும்பி வந்து பார்த்த பொழுது சிவப்பு நிற சூட்கேஸை காணவில்லை.

 

இதனால் அதிர்ச்சியடைந்த வடிவேல் உடனடியாக அங்கு இருந்த காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் சூட்கேஸை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

 

உடனடியாக மூன்று குழுக்களாக பிரிந்த போலீசார் அந்த இளைஞரைத் தேடினர். ஆட்டோ மூலம் கத்திப்பாராவுக்கு சென்ற அந்த இளைஞர் அங்கு டி-ஷர்டை மாற்றிக் கொண்டு சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏறித் தப்பிக்க முயன்ற நிலையில் போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் சிவகங்கையைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி சுந்தரலிங்கம் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்து முன்பு பாய்ந்த இளைஞர்; திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Youth lost their life at Trichy Central Bus Station
கோப்புப்படம்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்குச் செல்ல பரபரப்புடன் இருந்தனர். அப்பொழுது மத்திய பேருந்து நிலைய பகுதியில் ஒரு மஞ்சள் நிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் சாலையின் நடுவே இங்கும் அங்குமாக அலைந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த வழியாக ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ் வாலிபரை கடக்க முயன்றபோது திடீரென்று அந்த வாலிபர் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து தலையை விட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பஸ்சின் பின் சக்கரம் அந்த வாலிபரின் தலையில் ஏறி நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நேரில் பார்த்த பயணிகள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

முதலில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகப்பட்டு விசாரணை நடத்தினர். அப்பொழுது போலீசார் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த பொழுது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேமராவில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் மஞ்சள் நிற சட்டை அணிந்து கொண்டு வாலிபர் நின்று கொண்டிருப்பதும் திடீரென்று தனியார் பஸ் அந்த வழியாக வரும் பொழுது பஸ்சின் பின் சக்கரத்தில் திடீரென்று பாய்ந்து தலையை விட்டு உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது.

இறந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், என்ன காரணத்துக்காக தற்கொலை முயற்சி செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை. பிறகு போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் பெயர் ரமேஷ் (வயது 42) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புதூர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் ஹோட்டல் வியாபாரம் செய்து வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மனமுடைந்து பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதற்கு இடையில், அந்த வாலிபர் பஸ் சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.