![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/AX_UPtmq0Y9riNOacVePoZVub-OpWpEr_OdumdLzppM/1623046766/sites/default/files/2021-06/tl-land-1.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/3He0Oy47DbRkuMGczxl5yarUMFYYTmenBQWnzn6GK-U/1623046766/sites/default/files/2021-06/tl-land-2.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/jRYANFTrvg9GQqcUHKpKH8Cdbm0UvhDuRF5sMrtGWfM/1623046766/sites/default/files/2021-06/tl-land-3.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/qP-jKg8qZ5I9DLBnjOLfMj39Bozb7bNfUimLx6LIeWY/1623046766/sites/default/files/2021-06/tl-land-4.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/qE5QhpmpUO_wp9bk9mrwrTUOjffNKv1tgiLolayC_QE/1623046766/sites/default/files/2021-06/tl-land-5.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/wa0h2fhWIBfa3RikPFfJSvBvx5UCeT2pnuQeA3QP9Mg/1623046766/sites/default/files/2021-06/tl-land-6.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/RZOJKB2QLbVhoCmo5MSDvAgFWxD4e_Qc7ocCT3WyTDQ/1623046766/sites/default/files/2021-06/tl-land-7.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/vLkKw6FYMjwdDP1pidXdAeOBhAaUjYRQEp5WoUTIY0g/1623046766/sites/default/files/2021-06/tl-land-9.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/WB8dQYu9UzV6itoDWnVDS4BI0R5OZKlSHeOn_fGEtTY/1623046766/sites/default/files/2021-06/tl-land-8.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zt6613LRV33TzYJDiEW8hSvCQON4CXtyEbJDrAUVRoY/1623046766/sites/default/files/2021-06/tl-land-10.jpg)
![Recovery of temple property; Minister inspects live](http://image.nakkheeran.in/cdn/farfuture/eHckOzLwyZeMpUVFAG8FEm8ed1nZfQtB3E3Q0y7rQ0A/1623046766/sites/default/files/2021-06/tl-land-11.jpg)
Published on 07/06/2021 | Edited on 07/06/2021
சென்னை வடபழநி கோயிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கும் பணி, இன்று (07.06.2021) காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள், இடத்தைக் காலி செய்ய எங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என்றனர். அதற்கு இடத்தை நேரில் பார்வையிட்ட அறநிலையத்துறை அமைச்சர், ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம், "இன்னும் 48 மணி நேரத்தில் இடத்தைக் காலி செய்து கொடுக்க வேண்டும். காலிசெய்த பின்னர் உங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள். நான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன்" என்றார்.