/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/217_4.jpg)
சென்னை காசிமேடு அருகே கடலில் காணாமல் போன நான்கு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற விழுப்புரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் சென்னை காசிமேட்டிற்கு அருகேயுள்ள கடலில் காணாமல் போகினர். குறித்த நேரத்திற்குள் அவர்கள் வீடு திரும்பாததால் பதறிப்போன அவர்களது உறவினர்கள், நால்வரையும் பத்திரமாக மீட்க வேண்டும் எனக் கடலோர காவல்படைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, நால்வரையும் தேடும் பணியில் கடலோர காவல்படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவந்த நிலையில், தற்போது நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நால்வரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வருவதாகக் கூறப்படுகிறது
காணாமல் போன நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து, அவர்களது உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)