Skip to main content

“தற்போது கண்மாய் நிரம்பி வழிவதற்கு அதுதான் காரணம்” - விஜயபாஸ்கர் பேட்டி!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

That is the reason why the pond are full now

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கவிநாடு கண்மாய் நிரம்பியுள்ளதால், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்மாயைப் பார்வையிட்டார்.

 

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “12 ஆண்டுகளுக்குப் பிறகு கவிநாடு கண்மாய் நிரம்பியுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் 61 லட்ச ரூபாய் மதிப்பில் இந்தக் கண்மாயில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றன. தற்போது இந்தக் கண்மாய் நிரம்பி வழிவதற்கு அதுதான் காரணம். என்றும் இது விவசாயிகளுக்கும், ஆயக்கட்டுக்காரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

 

தற்போது மழையினால் ஏற்பட்ட பெரு வௌ்ளத்தில் அரசு நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் பொதுமக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மழைக் காலங்களில் வௌ்ள நீர் தேங்கி நிற்கிறது. நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் காய்ச்சிய நீரைத்தான் பருக வேண்டும். எந்த உணவையும் நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

Next Story

குளமங்கலம் கோயில் குடமுழுக்கு; லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள் (படங்கள்)

Published on 16/06/2024 | Edited on 16/06/2024

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை நடந்தது. செண்டை மேளம் முழங்க, யானையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்.

யாகசாலையில் வைத்து பல நாட்களாக பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுரம் பிரமாண்ட குதிரை சிலைக்கு நன்னீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்ட போது 20 க்கும் மேற்பட்ட கருடன்கள் வட்டமிட்டது. இந்தக் குடமுழுக்கைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதனால் ஆங்காங்கே தண்ணீர் தெளிக்க ஸ்பிரிங்லர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.