Skip to main content

ஆர்.பி.வி.எஸ். மணியன் ஜாமீன் மனு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

RBVS Maniyan Bail Petition Court action order

 

திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாகியது. இதையடுத்து ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் புகார்களும் எழுந்தன.

 

அதே சமயம் சென்னை தியாகராயர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆர்.பி.வி.எஸ். மணியன் சட்ட மேதை அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக இவர் மீது சென்னை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆர்.பி.வி.எஸ். மணியன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது காவல்துறை சார்பில் வாதத்தை முன்வைக்கையில், “ஆர்.பி.வி.எஸ். மணியன் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ சான்றுகள் அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தைச் சேர்ந்தவை. மேலும் மணியனின் பேச்சு சமூகத்தில் இரு பிரிவினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” எனவும் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு, விஷ பூச்சிகளை பிடிக்க பிரத்யேக எண்கள் அறிவிப்பு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Notification of special numbers for catching snake venomous insects

 

                                                       கோப்புப்படம் 

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

மழை வெள்ளத்தில் பாம்பு, விஷப்பூச்சிகள் பாதிப்புகள் இருந்தால் அவற்றை பிடிப்பதற்கான எண்கள் வழங்கப்பட்டுள்ளது. போரூர், ஐயப்பன்தாங்கல், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, நெற்குன்றம், கோயம்பேடு பகுதிகளில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு பாபா (98 41 58 88 52) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம், பெரம்பூர் பகுதிகளுக்கு சக்தி (90 94 32 13 93) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  அண்ணா நகர் முதல் பட்டாபிராம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு கணேசன் (74 48 92 72 27) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ஜெய்சன் (80 56 20 48 21) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு ராபின் (88 07 87 06 10) என்பவரை தொடர்பு கொள்ளலாம். போரூர் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, மணிகண்டன் (98 40 34 66 31) என்பவரை தொடர்பு கொள்ளலாம். குரோம்பேட்டை பகுதியில் உள்ளவர்கள் இது தொடர்பான புகாருக்கு, ரவி (96001190810) என்பவரை தொடர்பு கொள்ளலாம்.  

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நிவாரண முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Published on 05/12/2023 | Edited on 05/12/2023

 

Chief Minister M.K.Stal's inspection at the relief camp

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்தது. சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து கேட்டறிவதோடு, ஆய்வு நடத்தி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, அமைச்சர் கே.என்.நேரு, அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அங்கு உள்ளனர். வடசென்னை பகுதியான கண்ணப்பர் திடல் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் முதல்வரை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை, சிந்தாதரிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று  தமிழக முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்