/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4242.jpg)
திருவள்ளுவர், அம்பேத்கர், திராவிட இயக்க அறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து இந்துத்துவா சிந்தனையாளரும், ஆன்மீக பேச்சாளரும், வி.எச்.பி. முன்னாள் மாநிலத் துணைத் தலைவருமான ஆர்.பி.வி.எஸ். மணியன் அவதூறாகப் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக வைரலாகி வந்தது. இவருக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவந்தனர். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் புகார்களும் எழுந்தன.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் இவர் சட்டமேதை அம்பேத்கர் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்தார். இதன் காரணமாக அவர் மீது சென்னை தியாகராயர் நகர் காவல்நிலையத்தில் வி.சி.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா. செல்வம் அவர்களால்புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார் ஆர்.பி.வி.எஸ். மணியனை அவரது சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்தனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1614.jpg)
போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஆர்.பி.வி.எஸ். மணியன், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆர்.பி.வி.எஸ். மணியன், “நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. எனக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீர்தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளன. மேலும், என் முதுமையை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்” என கோரினார். மேலும், காவல் உறுதி செய்யப்பட்டால் தனக்கு தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனைக் கேட்ட நீதிபதி அல்லி, “இவை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும். தற்போது செப். 27 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு” என தனது உத்தரவில் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)