Skip to main content

“கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” - அ.ராசா விமர்சனம்

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
A. Raza said begging vessel in the hands of the child of God

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் நீலக்கிரி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் அ.ராசா தனது சமூக வலைத்தளைத்தில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததுக் குறித்துப் பகிர்ந்துளார். அதில், “கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம். அட்சயப்பாத்திரத்தோடு ஆந்திராவும் பீகாரும்; கடவுளை மற, மனிதனை நினை. பெரியார் வாழ்கிறார்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்