Skip to main content

கீழடி கண்காட்சியை பார்வையிட்ட ரவிச்சந்திரன்...!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ரவிச்சந்திரன் மதுரை உலக தமிழ்சங்கத்தில் கீழடி கண்காட்சியை பார்வையிட்டார்.

 

Ravichandran visited Keeladi exhibition

 



முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி மதுரை மத்திய சிறையில் இருந்து அவர் சொந்த ஊருக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரைக்கு வருகைதந்த ரவிச்சந்திரன் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருமோகூர் காளமேகபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை உலக தமிழ்சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கீழடி கண்காட்சியை பார்வையிட்டார். முன்னதாக உலகதமிழ்சங்க வளாகத்தின் முன்பாக உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  

இதை படிக்காம போயிடாதீங்க !