கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில், தெர்மல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்வேலி வட்டம் 21-இல் சந்தேகப்படும்படியாக டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனையறிந்த போலீசார், வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் 3 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த பழனி(54) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தயாளன் என்பதும், இவர்கள் ரேஷன் அரிசியை நெய்வேலியில் இருந்து கடத்தி செல்ல முற்பட்டதும் தெரியவந்தது. பின்னர் பழனி, தயாளன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டாட்டா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.