Skip to main content

ஆமைக்கறி சமைத்து சாப்பிடும் அதி விரைவு படையினர்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Rapid Response Force Police who cook and eat turtle curry

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தெங்குமரஹாடா வனப்பகுதி உள்ளது. தெங்குமரஹாடா மாயாற்றை மையமாக கொண்டு பவானிசாகர் வனப் பகுதியில், நீலகிரி வனப்பகுதியும் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்  மற்றும் நக்சலைட் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசார், அதிவிரைவு படை போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுமுயல், ஆமை, முதலைகள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் வேட்டையாடும் கும்பல் வந்து விலங்குகளை வேட்டையாடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தெங்குமரஹாடா மாயாற்று அடர்ந்த வனப்பகுதியில் அதிவிரைவு படை போலீசார் சிலர் வனப்பகுதியில் இருந்து ஆமையை எடுத்து வந்து கத்தியால் ஆமையை அறுத்து சமைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சம்பவம் நடந்த பகுதி ஈரோடு மாவட்ட எல்லை வனப்பகுதியும், நீலகிரி மாவட்ட எல்லை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அந்த வீடியோவில் இருக்கும் வீரர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை அலுவலர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.

சார்ந்த செய்திகள்