Skip to main content

காவிரிநீர் கிடைப்பதில் சிக்கல்..பஸ் மறியல் நடத்த முடிவு

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

 

      ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் நகரைச்சுற்றியுள்ள 55 கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பஸ் மறியல் நடத்த முடிவு செய்துள்ளனர் சிக்கல் கிராம மக்கள்.

 

k

 

இதுக்குறித்து பேசிய அக்கிராம மக்களோ,  " சிக்கல் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள 55 கிராமங்களிலும் காவிரிகுடிநீருக்காக குழாய்களில் தவமிருக்கின்றனர். கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், கமுதி கோட்டைமேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் குடிநீரை டேங்கர் மூலம் குடம் ரூ.6க்கும், சுத்திகரிக்கப்பட்ட நீர் ரூ.15க்கும் பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.

 

விவசாயிகள், உப்பள கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை எளியவர்கள் தங்களது வருமானத்தின் ஒருபகுதியை குடிநீருக்காக செலவு செய்துவருகின்றனர். ஊராட்சிகளில் (ஆர்.ஓ., பிளாண்ட்) சுத்திகரிப்பு குடிநீராக மாற்றினால் கிராம மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற ஜூன் 11 (செவ்வாய்கிழமை) அன்று காலையில் சிக்கல் பேருந்து நிலையம் அருகே பஸ்மறியல் போராட்டம் நடைபெறும்." என்கின்றனர் அவர்கள். இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை...அசத்திய பொதுமக்கள்..!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

 

      தாங்கள் கல்வி பயின்றதும், தங்களது குழந்தைகள் கல்வி பயின்று வருவதுமான அரசுப் பள்ளிக்கு மேள தாளத்துடன், ஊர்வலமாக சென்று பள்ளிக்குத் தேவையானப் பொருட்களை சீதனமாக வழங்கியுள்ளனர் சாயல்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களும் பெற்றோர்களும்.

    

sa

   

220 மாணக்கர்களுடன், 7 ஆசிரியர்களை மட்டும் இயங்கி வருவது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சுமார் 65 வருட பாரம்பரியம் கொண்ட இப்பள்ளி ஆங்கில வழிக் கல்வியினை அடிப்படையாக அரசுப் பள்ளி. அருகில் பல மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ வழியினைக் கொண்ட தனியார் பள்ளிகள் பல இருப்பினும், அதனை விட தரம் உயர்ந்த இப்பள்ளியில் மாணாக்கர்களை சேர்ப்பதில் இன்னும் ஆர்வம் குறையவில்லை பொதுமக்களுக்கு.!

 

sa

 

இந்நிலையில், பள்ளிக்கு தேவையான குறிப்பாக ஸ்மார்ட் கிளாஸ் ப்ரொஜெக்டர், பீரோ, ஃபேன், நோட்டு, புத்தகங்கள், பென்சில், சேர், குடம், பாய் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் ரூ. இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை சொந்த செலவில் வாங்கி சாயல்குடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில் இருந்து மேளதாளத்துடன் எடுத்து வந்து அருப்புக்கோட்டை சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர் பெற்றோர்களும் மற்றும் பொதுமக்களும். மனம் மகிழ்ந்த மாணக்கர்களும், ஆசிரியர்களுமாக இணைந்து பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா செய்தது குறிப்பிடத்தக்கது.